அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவ துவங்கியுள்ளது. தினமும் 100 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகின்றனர்

வாஷிங்டன்:


அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவ துவங்கியுள்ளது. தினமும் 100 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகின்றனர். இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 1,135 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், 'அமெரிக்காவின் சுகாதாரத் துறை ஆய்வகங்களுக்கு மிகக் குறைந்த அளவில் தான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பரிசோதனைக்குத் தேவையான மருத்துவ கருவிகள் மற்றும் இயந்திரங்கள் நம்மிடம் போதிய அளவில் இல்லை. கையுறைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது' என, வெளிப்படையாக விவாதித்தனர்.