ஹைட்ராக்சிகுளோராகுயின் மருந்தால் பலன் இல்லை: அமெரிக்க விஞ்ஞானிகள்

வாஷிங்டன்: கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தினால் பயன் கிடைக்கவில்லை என அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்


மலேரியாவுக்கு தடுப்பு மருந்தாக பயன்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த உலகின் பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வந்தன. அமெரிக்கஅதிபர் டிரம்ப் இந்தியாவிலிருந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்து உதவும் படி பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அம்மாத்திரைகள் பெரும் எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்டது. அமெரிக்கா மட்டுமில்லாது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஏற்றுமதி செய்யப்பட்டது



இந்நிலையில் அமெரிக்க மருத்து விஞ்ஞானிகள் கூறியுள்ளதாவது, 'ஹைட்ராக்சி குளோரோகுயின், கொரோனா சிகிச்சையில் நல்ல பலன் தரவில்லை. ஹைட்ராக்சி குளோரோகுயினோடு அசித்ரோமைசின் சேர்த்து தரப்படும் போது விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுகின்றன. ஹைட்ராக்சிகுளோரோகுயின் பயன்படுத்துவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது' இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்